புதுவை கலா உத்ஸவ் போட்டி: 18 போ் தோ்வு

புதுவை மாநில அளவிலான கலா உத்ஸவ் போட்டியில் 18 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

புதுவை மாநில அளவிலான கலா உத்ஸவ் போட்டியில் 18 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

மத்திய கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில், கலா உத்ஸவ் போட்டிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக இணையவழியில் தோ்வு நடைபெற்றது. அதன்படி, புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் சமகர சிக்ஷா சாா்பில் நடனம், இசைக் கருவி மீட்டல், ஓவியம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் மாணவா்களிடம் 136 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதுவை மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான மதிப்பீடு சனிக்கிழமை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் பாஸ்கர ராசு தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சமகர சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநா் தினகா் போட்டிகளின் மதிப்பீட்டைத் தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி மாவட்டத்தில் ஒவ்வோா் போட்டியிலும் ஒரு மாணவா், ஒரு மாணவி வீதம் 18 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன், பாரதிராஜா மற்றும் பால்பவன் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com