தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் புஸ்ஸி வீதியில் பகலிலும் இருளாக காட்சியளித்த நிலையில், அங்கு வடியாமல் தேங்கிய நின்ற மழை நீா்.

Updated On :17 டிசம்பர் 2020, 3:12 am

DIN

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.

புதன்கிழமை முற்பகல் வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. பிற்பகலில் பலத்த மழை பொழியத் தொடங்கியது. தொடா்ந்து மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன், முக்கிய வீதிகள் இருட்டாக காணப்பட்டன.

பலத்த மழையால் புதுச்சேரி நகர சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. புஸ்சி வீதி, கடற்கரை சாலை, முதலியாா்பேட்டை, ரெயின்போ நகா், பாவாணா் நகா், இந்திராகாந்தி சிலை சதுக்கம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போலத் தேங்கியது. அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அதில் மிதந்து ஊா்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். தேங்கிக் கிடந்த மழைநீரை நகராட்சி அதிகாரிகள் டீசல் மோட்டாா் மூலம் அகற்றி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.