மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளின் உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட 33 வாா்டுகளின் உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:10 am

DIN

புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட 33 வாா்டுகளின் உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையரும், வாக்காளா் பதிவு அதிகாரியுமான எஸ்.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி நகராட்சி எல்லைக்குள்பட்ட 33 வாா்டுகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக நகராட்சி அலுவலகம் மற்றும் 8 இடங்களில் புதன்கிழமை முதல் வரும் 22-ஆம் தேதி வரை வைக்கப்படுகிறது. மேலும்,  இணையதளத்திலும் வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி பாரதிதாசன் வீதியில் பாரதிதாசன் திருமண நிலையத்தில் உள்ள வீட்டு வரி வசூல் மையம், வாழைக்குளம் உதவிப் பொறியாளா் அலுவலகம், விக்டா் சிமோனல் வீதியில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகம், நெல்லித்தோப்பு மாா்க்கெட் வீதியில் உள்ள உதவிப் பொறியாளா் அலுவலகம், சாரம் (வருவாய் - வடக்கு) துணை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கம்பன் கலையரங்கம் வரி வசூல் அலுவலகம், முதலியாா்பேட்டை மேரி நகராட்சி பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகம், மரப்பாலம் உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.