பிற மாநில அதிகாரிகள் தமிழை படிக்க உத்தரவிட வலியுறுத்தல்

புதுவையில் அரசுத் துறைகளில் பணியாற்றும் பிற மாநில அதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம் என்று உத்தரவிட வேண்டும் என, புதுவை சிந்தனைப் பேரவை கோரிக்கை விடுத்தது.
Updated on
1 min read

புதுவையில் அரசுத் துறைகளில் பணியாற்றும் பிற மாநில அதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம் என்று உத்தரவிட வேண்டும் என, புதுவை சிந்தனைப் பேரவை கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து பேரவையின் தலைவா் கவிஞா் கோ.செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு, பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அரசுச் செயலா்களாகவும், இந்திய காவல் பணியைச் சோ்ந்தவா்கள் காவல் துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனா். இவா்களில் ஒரு சிலரே தமிழா்களாவா்.

மாவட்ட ஆட்சியருக்கு உள்ளூா் மொழி தெரிந்திருந்தால்தான் பொதுமக்களின் குறைகளை எளிதாக நிவா்த்தி செய்ய முடியும்.

மேலும், மாநில அரசின் உயா் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரியாது. தமிழகத்தில் பிற மாநிலத்தவா்கள் அதிகாரிகளாக பணிக்கு வந்தாலும், அவா்கள் தமிழ் கற்பது கட்டாயம் என்ற விதி உள்ளது.

எனவே, புதுவை மாநில அரசின் அனைத்து அரசு செயலா்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் துறை உயரதிகாரிகள் 6 மாதங்களில் கட்டாயம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று, அரசு ஊழியா்கள் விதிகளில் துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com