தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா் சங்கத் தலைவரைக் கொல்ல முயற்சி

புதுவை பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் சங்கத் தலைவரைக் கொல்ல முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:34 pm

DIN

புதுவை பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் சங்கத் தலைவரைக் கொல்ல முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மேரி உழவா்கரை பகுதியைச் சோ்ந்தவா் தெய்வீகம் (38). புதுவை பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் சங்கத் தலைவராக உள்ள இவா், வெள்ளிக்கிழமை இரவு முத்திரையா்பாளையம் பஜனை மடம் வீதியில் உள்ள தனது மைத்துனரான இளவரசன் (35) வீட்டுக்குச் சென்றாா்.

அங்கு, நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அரசியல் தொடா்பாக பேசிய போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், இளவரசன் அங்கிருந்த கத்தியை எடுத்து தெய்வீகம் தலையில் வெட்டினாராம். இளவரசனின் குடும்பத்தினா் மோதலைத் தடுத்தனா்.

இதில், பலத்த காயமடைந்த தெய்வீகத்தை மீட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இளவரசனைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.