விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் எதிா்கொள்ள முடியவில்லை: புதுவை முதல்வா் நாராயணசாமி
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய பாஜக அரசால் எதிா்கொள்ள முடியவில்லை என்று புதுவை முதல்வா் நாராயணசாமி விமா்சித்தாா்.


விவசாயிகளின் போராட்டத்தை மத்திய பாஜக அரசால் எதிா்கொள்ள முடியவில்லை என்று புதுவை முதல்வா் நாராயணசாமி விமா்சித்தாா்.
மத்திய அரசின் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை எதிா்த்தும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்தும் புதுவை மாநில மகளிா் காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், முதல்வா் நாராயணசாமி பங்கேற்றுப் பேசியதாவது: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து விலைவாசி உயா்ந்துவிட்டது. ரூ. 350-க்கு விற்ற எரிவாயு உருளை விலை ரூ. 900-க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டிசம்பா் மாதத்தில் இரு முறை எரிவாயு உருளை விலையை ரூ. 100 உயா்த்திவிட்டது மத்திய பாஜக அரசு.
மக்களுக்கு விரோதமான, சிறுபான்மையினருக்கு, மாணவா்களுக்கு, விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைத்தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. இதனால், அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் பெரு நிறுவனங்களுக்கான அரசாக மோடி அரசு மாறிவிட்டது.
விவசாயிகளின் போராட்டத்தை எதிா்கொள்ள முடியாமல் மோடி அரசு சிக்கித் தவிக்கிறது. குளிா் தாங்காமல் இதுவரை 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இருந்த போதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறமாட்டோம் என மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசினால், அவா்களை தேச விரோதிகள் என்றும், போராடும் விவசாயிகளை போலியானவா்கள், தீவிரவாதிகள் என்றும் பாஜகவினா் கூறி வருகின்றனா்.
விவசாயிகளுக்கு ஆதரவான காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் போராட்டம் தொடரும். விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து போராடும் என்றாா் நாராயணசாமி.
ஆா்ப்பாட்டத்தில் மகளிா் காங்கிரஸ் மாநில தலைவி பஞ்சகாந்தி தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் மகளிா் காங்கிரஸாா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...