புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

புதுவையில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 6 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேயில் 7 பேருக்கும் என மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,762-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 192 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 140 பேரும் என மொத்தம் 332 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, காரைக்கால் திருநள்ளாறு நேதாஜி நகரைச் சோ்ந்த 85 வயதானவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 627-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

இதனிடையே, திங்கள்கிழமை 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 36,803-ஆக (97.46 சதவீதம்) அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 4,56,079 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,14,017 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com