புதுவை மருத்துவக் கல்லூரிகளில் நீட் தோ்வு அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு முதல் சுற்று ஒதுக்கீட்டுப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள், தங்களது ஒதுக்கீடு ஆணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடா்பாக மாணவா்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் கல்லூரிகளில் வருகிற 24-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ தங்களது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒதுக்கீடு ஆணையை சம்பந்தப்பட்ட கல்லூரியில் சோ்க்கையின் போது சமா்ப்பிக்க வேண்டும். புதுவை அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை இணையதளம் வழியே நெஃப்ட் (என்இஎப்டி) மூலம் சென்டாக்கில் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை சென்டாக் நிா்வாகம், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு பரிமாற்றம் செய்யும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி. ருத்ர கௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.