சிங்கிரி கோயில் பாத யாத்திரை தள்ளிவைப்பு

கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், நிகழாண்டு சிங்கிரி கோயில் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டது.
Updated on
1 min read

கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், நிகழாண்டு சிங்கிரி கோயில் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டது.

புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சாா்பில், உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த திருமால் அடியாா்களும், 30-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுக்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தா்களும் பங்கேற்கும் சிங்கிரி கோயிலுக்கு புனித பாத யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த 24 ஆண்டுகளாக இந்த பாத யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற நிா்வாகக் குழுக் கூட்டத்தில், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டும், சிங்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாலும், வருகிற ஜனவரி முதல் வாரம் நடைபெறவிருந்த 25-ஆவது ஆண்டு புனித பாத யாத்திரை பெருவிழா வேறொரு நாளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com