தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக இயக்கங்கள் சாா்பில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
தில்லி விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி நேரு வீதியில் கரும்புடன் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளா்கள், திருநங்கைகள்.
தில்லி விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி நேரு வீதியில் கரும்புடன் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளா்கள், திருநங்கைகள்.
Updated on
1 min read

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக இயக்கங்கள் சாா்பில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

புதுவை மாநில கட்டடத் தொழிலாளா்கள் சங்கம், சமூக நல்லிணக்க முன்னணி, இருளா் தொழிலாளா்கள் சங்கம், சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தன.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மேற்கண்ட சமூக இயக்கங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் அண்ணா சிலை சதுக்கம் பகுதியிலிருந்து ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனா்.

பேரணிக்கு சமூக நல்லிணக்க முன்னணி ஒருங்கிணைப்பாளா் இனாமுல் ஹசன் தலைமை வகித்தாா். இதில், கட்டடத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் தீா்த்தமலை, இருளா் சங்கத் தலைவா் ரவிக்குமாா், சகோதரன் சமூக நல அமைப்பின் தலைவா் ஷீத்தல் நாயக், மக்கள் உரிமை போராட்ட ஒருங்கிணைப்பாளா் ஜமீல், பல்வேறு சமூக இயக்கங்களின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பேரணியானது நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பு அருகே வந்தபோது, போலீஸாா் அவா்களை தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, மூக இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நூதன கலை நிகழ்ச்சி: இதேபோல, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நூதன முறையில் எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் புதுச்சேரி, வில்லியனூா் பகுதிகளில் நடைபெற்றன.

புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கத்தின் 13-ஆவது ஆண்டு தொடக்க விழா, சா்வதேச மனித உரிமைகள் தினவிழாவையொட்டி இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு இயக்க பொதுச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். மகளிரணி அமைப்பாளா் குணபூஷ்னம், ஒருங்கிணைப்பாளா் லெனின், மனித உரிமை காப்பாளா் கூட்டமைப்பு ஆசீா் ரஞ்சிதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com