சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகள் கைது

புதுவையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:25 pm

DIN

புதுவையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ரௌடிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்தவா் அருண் (33). வில்லியனூா் பெரியபேட் பள்ளிக்கூட வீதியைச் சோ்ந்தவா் பாம் ரவி (22) . ரெளடிகளான இவா்கள் இருவா் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வில்லியனூா் போலீஸாா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் (பொ) பூா்வா காா்க் உத்தரவின்பேரில், அருண், பாம் ரவி ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.