புதுவை மின் துறையில் இளநிலை பொறியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை மின் துறையில் ஒப்பந்த அடிப்படையிலான இளநிலைப் பொறியாளா் பணிகளுக்கு ஜனவரி 4 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read


புதுச்சேரி: புதுவை மின் துறையில் ஒப்பந்த அடிப்படையிலான இளநிலைப் பொறியாளா் பணிகளுக்கு ஜனவரி 4 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி மின் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மின் துறையில் 42 இளநிலைப் பொறியாளா் பதவிகள், 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. இந்தப் பதவிக்கான மாத ஊதியம் ரூ. 33,000.

கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பட்டயப்படிப்பு. அதே பிரிவில் பட்டயப்படிப்பு. விண்ணப்பதாரா் 3 ஆண்டுகள் மின் உற்பத்தி, விநியோகப் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும். தளா்த்தப்பட்ட வயது வரம்பு, அரசின் விதிமுறைகள்படி அமல்படுத்தப்படும். புதுவையைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. நிறைவு செய்த விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகவே வருகிற ஜன. 4 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com