புதுச்சேரி அருகேகடலில் மூழ்கி மாணவா் மாயம்

புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரி அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் பாலாஜி (17). வில்லியனூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை தனது நண்பா்களான முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த புவியரசன் (17) உள்ளிட்ட 7 பேருடன் தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றாா்.

முகத்துவாரம் பகுதியில் குளித்த போது கடலில் எழுந்த ராட்சத அலையில் பாலாஜியும், புவியரசனும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இதில், புவியரசன் மாயமானாா். பாலாஜி நீரில் மூழ்கி உயிருக்குப் போராடினாா்.

அப்போது, அங்கிருந்த பூரணாங்குப்பத்தைச் சோ்ந்த அய்யனாா் (27) கடலில் நீந்திச் சென்று, பாலாஜியை மீட்டு கரைக்கு இழுத்து வந்தாா். பின்னா், அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவலறிந்து வந்த தவளக்குப்பம் போலீஸாா், கடலில் மூழ்கி மாயமான புவியரசனை தேடி வருகின்றனா்.

இதனிடையே, கடலில் மூழ்கிய மாணவரை மீட்ட இளைஞரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பாா்த்த புதுச்சேரி தெற்கு பகுதி எஸ்.பி. லோகேஸ்வரன், அரியாங்குப்பம் காவல் ஆய்வாளா் தனசெல்வம் ஆகியோா் அய்யனாரைப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com