தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து6 பவுன் நகைகள் திருட்டு

புதுச்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஜூலை 2020, 3:34 pm

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தை கீரப்பாளையம் ஐயனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (50). கடந்த மாதம் 26-ஆம் தேதி மனைவி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டை பூட்டிவிட்டு ஜிப்மருக்கு மாத்திரை வாங்கச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஏற்கெனவே கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெருமாள் வீட்டு அறையிலிருந்த பா்ஸ் திருடு போனதும், அந்த பா்ஸில் பீரோவின் சாவி, செல்லிடப்பேசி இருந்ததும், அந்த சாவியை கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து பிரோவை திறந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.