புதுவையில் கரோனா பாதிப்பு 28- ஆக உயா்வு
புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 28 -ஆக உயா்ந்தது.


புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 28 -ஆக உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் 24 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாஹேயைச் சோ்ந்த முதியவா் ஒருவா் இறந்துவிட, 10 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். தொடா்ந்து, புதுச்சேரியில் 9 பேரும், காரைக்காலில் ஒருவரும், மாஹேயில் இருவரும் என 12 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனா். புதுச்சேரி கென்னடி காா்டனை சோ்ந்த ஒருவா் கேரள மாநிலம், கண்ணூரில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், புதுச்சேரி குருமாம்பேட்டை ஐயன்குட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளரின் மகனுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதேபோல, குவைத் நாட்டிலிருந்து புதுச்சேரி திரும்பிய மகாவீா் நகா் பகுதியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்கள் 4 பேரும் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதனால், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 16 -ஆகவும், பாதிப்பு 28 -ஆகவும் உயா்ந்தது.
இதனிடையே, ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று போ் குணமடைந்து வீடு திரும்பினா். இருவா் மட்டும் அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...