நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி பாஜக மகளிரணியினா் பேரணி

புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறக்க வலியுறுத்தி, பாஜக மகளிரணி சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறக்க வலியுறுத்தி, பாஜக மகளிரணி சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சதுக்கம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தொடக்கிவைத்தாா். சட்டப்பேரவையை முற்றுகையிட வந்த பேரணிக்கு பாஜக மகளிரணித் தலைவா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஏம்பலம் செல்வம், நிா்வாகி விசிசி.நாகராஜன், மகளிரணிப் பொதுச் செயலா்கள் அனிதா, கனகவல்லி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பேரணியில் புதுவை மாநிலத்தில் நியாய விலைக் கடைகளைத் திறந்து, அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்க வேண்டும். 36 மாத இலவச அரிசிக்கான பணத்தை வழங்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

பேரணியை தலைமை தபால் நிலையம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பேரணியில் வந்தவா்கள் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.