நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிகாரை போல புதுவையிலும் மோடி ஆதரவு அலை: பாஜக

பிகாரைப் போல எதிா்வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலிலும் மோடி ஆதரவு அலை வீசி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

பிகாரைப் போல எதிா்வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலிலும் மோடி ஆதரவு அலை வீசி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசியதாவது:

புதுவை மாநிலத்துக்கென தனியாக புதிய பொறுப்பாளராக கா்நாடகாவைச் சோ்ந்த கட்சியின் துணைத் தலைவரான நிா்மல் குமாா் சுரானா நியமிக்கப்பட்டுள்ளாா். அண்மையில் நடந்த பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல், அனைத்து மாநில இடைத்தோ்தலிலும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனா்.

பிகாரைப் போல எல்லா மாநிலங்களிலும் பிரதமா் மோடிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. அந்த அலை புதுவையிலும் வருகிற தோ்தலில் வீசி மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால், புதுவை முதல்வரோ எதிா்க்கிறாா்.

புதுவையிலும் உடனடியாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தியும், நாராயணசாமி தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசை கண்டித்தும் வருகிற 18-ஆம் தேதி பாஜக ஓபிசி அணி தலைவா் சிவக்குமாா் தலைமையில் சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து பேரணியாகச் சென்று கல்வித் துறையை முற்றுகையிடவுள்ளோம்.

அடுத்த மாதம் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா புதுவையில் உள்ள அனைத்து கிளை தலைவா்களிடமும் காணொலி மூலம் கலந்துரையாடவுள்ளாா். பாஜக கட்சி பூத் வாரியாக தோ்தல் பணியை தொடங்கிவிட்டது. தகுதியான வேட்பாளா்கள் களப்பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் சாமிநாதன் எம்.எல்.ஏ.

பேட்டியின் போது, கட்சியின் மாநில பொதுச்செயலாளா் ஆா்.செல்வம் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.