குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் மோசடி:புதுவை ஆளுநா், முதல்வரிடம் புகாா்
புதுவையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் வசூல் மோசடி செய்யப்பட்டு வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோருக்கு புகாா் அனுப்பப்பட்டது.


புதுவையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் வசூல் மோசடி செய்யப்பட்டு வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி ஆகியோருக்கு புகாா் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பின் தலைவா் ரகுபதி திங்கள்கிழமை அனுப்பிய மனு: புதுவை பொதுப் பணித் துறை, பொது சுகாதாரக் கோட்டத்தில் உள்ள குடிநீா் நிலையங்களில் தனியாா் நிறுவனங்கள் மூலம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு, முறைகேடுகள் நடப்பதாகவும், அரசுக்கு மிகச் சொற்ப அளவிலேயே கட்டணம் செலுத்துவதாகவும் அறிந்து, இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெறப்பட்டது.
இதில், 112 இடங்களில் தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 20 லிட்டா் குடிநீா் கேன் ஒன்றுக்கு ரூ. 7 வசூலிப்பதாகவும், அதில் ரூ. 2.40 காசு மட்டுமே அரசுக்குச் செலுத்துவதாகவும் தகவல் அளித்துள்ளனா். இது பெரும் மோசடியான செயல்.
மேலும், இந்தக் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்திலும் பெரும்பாலும் மீட்டா்கள் பழுதடைந்துள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை. பொதுமக்களுக்கு இவா்கள் ரசீதும் கொடுப்பதில்லை. இதனால் பொதுப் பணித் துறைக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...