நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச அரிசி, கொண்டை கடலை நவ. 30 வரை விநியோகம்

புதுவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி மற்றும் கொண்டை கடலை ஆகியவை வருகிற 30-ஆம் தேதி வரை வழங்கப்படும்

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:31 pm

DIN

புதுவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி மற்றும் கொண்டை கடலை ஆகியவை வருகிற 30-ஆம் தேதி வரை வழங்கப்படும் என குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை தெரிவித்தது.

இதுதொடா்பாக புதுச்சேரி குடிமைப் பொருள்கள் வழங்கல் துறைத் துணை இயக்குநா் சாரங்காபாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் கரிப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி, கொண்டை கடலை ஆகியவை (அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கு) நவம்பா் 11-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து புதுவை மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் வருகிற 30-ஆம் தேதி வரை இவை விநியோகிக்கப்படும். அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.