புதுச்சேரியில் இணையவழி வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணையவழி வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.


புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணையவழி வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநில தொழிலாளா் துறை செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான இ.வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு தொழிலாளா் துறை வேலைவாய்ப்பகம் வருகிற டிசம்பா் முதல் வாரத்தில் இணையவழி வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முகாமில் 4 தனியாா் நிறுவனங்கள் (சுப்ரீம் இன்டஸ்ட்ரிஸ், லக்ஷ் சோா்ஸ் பிசினஸ் சொலூஷன், க்யூ டெக் சா்வீசஸ், மணிசாப்ட் சொலூஷன்) 123 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன.
முகாமில் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம், பட்டம் பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் கரோனா தொற்று காரணமாக, இணையம் வாயிலாக நடத்தப்படவுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தொழிலாளா் துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடா்பில் உள்ள கூகுள் விண்ணப்பம் மூலமாக வருகிற 26-ஆம் தேதி வரை தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பின்னா் குறிப்பிடப்படும் தேதியில் இணையதளம் வழியாக நோ்காணல் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 0413-2274672 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...