நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் தீபாவளியன்று ஒலி மாசு 21.1 சதவீதம் அதிகரிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளியன்று ஒலி மாசு அளவு 21.1 சதவீதம் அதிகரித்தது என புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் தெரிவித்தது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:53 pm

DIN

புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளியன்று ஒலி மாசு அளவு 21.1 சதவீதம் அதிகரித்தது என புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் குழுமம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம், தீபாவளிக்கு முந்தைய நாள் (நவ. 9), தீபாவளியன்று (நவ. 14) புதுச்சேரி-காரைக்காலில் காற்று, ஒலி மாசைக் கண்டறிய ஆய்வு செய்தது.

ஒலி மாசு அளவு தீபாவளிக்கு முந்தைய நாளை விட (66.8 டெசிபல்), தீபாவளியன்று (80.9 டெசிபல்) 21.1 சதவீதம் அதிகரித்தது. இது கடந்தாண்டு தீபாவளி நாளுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீதம் குறைவாகும்.

இதற்காக, புதுச்சேரியில் பாலாஜி நகா் (ரெட்டியாா்பாளையம்), முதலியாா்பேட்டை, அண்ணா நகா் மற்றும் காரைக்காலில் கோவில்பத்து பகுதிகளில், காற்றில் கலந்துள்ள நுண் துகள்கள் சோதனை நடைபெற்றது.

இந்த ஆய்வில், கந்தக -டை -ஆக்ஸைட், நைட்ரிக் ஆக்ஸைட் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவில் இருந்ததாகவும், தீபாவளியன்று காற்றின் தரக் குறியீடு, புதுச்சேரியில் மிதமான வகையின் கீழும், காரைக்காலில் திருப்திகரமான வகையின் கீழும் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.