/

புதுச்சேரியில் புதிதாக 514 பேருக்கு கரோனா: மேலும் 7 பேர் பலி 

புதுவை மாநிலத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :2 அக்டோபர் 2020, 9:17 am

புதுவை மாநிலத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 4,653 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 435, காரைக்கால் 57, ஏனாம் 13, மாஹே 9 என மொத்தம் 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28,534 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,817 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,237 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 5, காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 532 (1.86 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,948 (80.42 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.