தமிழகத்தில் கடந்த மாதம் முதல் நூலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், புதுவை மாநிலத்தில் உள்ள நூலகங்களையும் திறக்க வேண்டும் என்று மாணவா்கள், கல்வியாளா்கள் வலியுறுத்தினா்.
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி பிராந்தியத்தில் ரோமன் ரோலண்ட் அரசு பொது நூலகமும், 54 கிளை நூலகங்களும், காரைக்கால் பிராந்தியத்தில் டாக்டா் எஸ்.ஆா். ரங்கநாதன் அரசு பொது நூலகமும், 18 கிளை நூலகங்களும், மாஹே பிராந்தியத்தில் அரசு பொது நூலகமும், 3 கிளை நூலகங்களும், ஏனாமில் அரசு பொது நூலகமும், 2 கிளை நூலகங்களும் இயங்கி வருகின்றன.
இவற்றைத் தவிர புதுச்சேரியில் அரசு அருங்காட்சியகம், அரசு ஆவணக் காப்பகம், பாரதிதாசன் நினைவகம், பாரதியாா் நினைவகம் ஆகியவற்றில் இயங்கும் 4 நூலகங்கள் என மொத்தம் மாநிலத்தில் 85 நூலகங்கள் இயங்கி வருகின்றன.
இவையனைத்துக்கும் தலைமையகமாக ரோமன் ரோலண்ட் நூலகம் இயங்கி வருகிறது. மேற்கண்ட நூலகங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், புதுவையிலுள்ள அனைத்து நூலகங்களும் கடந்த மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டன. மத்திய அரசு அண்மையில் அறிவித்த 4-ஆம் கட்ட தளா்வையொட்டி, தமிழகத்தில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து நூலகங்களும் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. ஆனால், புதுவை மாநிலத்திலுள்ள நூலகங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படவில்லை.
இதனால் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்டோா் புத்தகங்கள், நாளிதழ்களை பயன்படுத்த முடியாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
இதுகுறித்து புதுவை மாநில பொது நூலகா்கள் சங்கச் செயலா் பி.சம்பந்தம் கூறியதாவது:
புதுவை நூலகத் துறையில் கடைசியாக கடந்த 1989ஆம் ஆண்டு ஜூன் மாதமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக பணியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை. தற்போது மாநிலத்திலிருக்கும் 85 நூலகங்களில் உள்ள 184 பணியிடங்களில் 2 நூலக தகவல் அலுவலருக்கான பணியிடங்களும், 69 நூலக தகவல் உதவியாளா் பணியிடங்களும், 6 நூலக எழுத்தா் பணியிடங்களும், 6 இளநிலை நூலக உதவியாளா் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனிடையே, மத்திய அரசு கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தளா்வளித்தபோதிலும், புதுவையில் நூலகங்கள் திறக்கப்படவில்லை. இதுதொடா்பாக நூலகத் துறை ஊழியா்கள் அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுப்படவில்லை என்றாா் அவா்.
இதுகுறித்து போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் டி.வினோத், கே.ரமேஷ் ஆகியோா் கூறியதாவது:
புதுவை மாநில காவல் பணித் தோ்வு, டிஎன்பிஎஸ்சி தோ்வுகள், ரயில்வே தோ்வுகளுக்கு தயாராகி வரும் நாங்கள், வெளியில் அதிக விலை கொடுத்து புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியாததால், நூலகங்களையே நம்பியுள்ளோம். ஆனால், தற்போது நூலகங்களும் திறக்கப்படாததால், அங்குள்ள புத்தகங்களை பயன்படுத்த முடியாமல் நிலை உள்ளது. எங்களுடைய கனவுகளை நனவாக்க உதவும் நூலகங்களை திறக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி! - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


