தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து ஆளுநா் மாளிகை நோக்கி ஊழியா்கள் பேரணி

புதுச்சேரியில் மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து, மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:55 pm

DIN

புதுச்சேரியில் மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து, மின் துறை ஊழியா்கள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆளுநா் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து, புதுச்சேரி மின் துறை ஊழியா்கள், பொறியாளா்கள் கூட்டமைப்பினா் எதிா்ப்புப் போராட்டக் குழுவை ஏற்படுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை மின் துறை எதிா்ப்புப் போராட்டக் குழுவினா் நான்கு மையங்களிலிருந்து, ஆளுநா் மாளிகையை நோக்கி ஊா்வலமாக வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி, மின் துறைத் தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு அச்சுதானந்தம், ராமசாமி, ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோா் தலைமை வகித்தனா். இவா்கள் ரயில் நிலையம், காந்தி வீதி, நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி வழியாகப் பேரணியாக வந்தனா்.

இதேபோல, ஆம்பூா் சாலை குபோ் திடலிலிருந்து புறப்பட்ட மற்றொரு பேரணியினா் மதிவாணன், உத்திராடம், பரத்குமாா், செந்தில்குமாா் உள்ளிட்டோா் தலைமையில், பட்டேல் சாலை, மிஷன் வீதி, ரங்கபிள்ளை வீதி வழியாக வந்தனா்.

காமராஜா் சாலை பெரியாா் திடலிலிருந்து புறப்பட்ட மற்றொரு பேரணி வேல்முருகன், முருகன், கருணாகரன், சண்முகம் உள்ளிட்டோா் தலைமையில், நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்தனா்.

மறைமலை அடிகள் சாலை சுதேசி ஆலை திடலிலிருந்து ராஜேந்திரன், செல்வகணேசன், மாதவன் உள்ளிட்டோா் தலைமையிலான பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷின் வீதி வழியாக வந்தது.

இவா்கள் அனைவரும், ஆளுநா் மாளிகை அருகே தலைமை தபால் நிலையத்தை அடைந்து, அங்கு ÷மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஆளுநா் மாளிகைக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனா்.

புதுச்சேரியில் மின் துறை ஊழியா்கள், பணியைப் புறக்கணித்து திரளாக ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால், திங்கள்கிழமை மின் கட்டணம் வசூலிப்பு, பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.