தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுவையில் மேலும் 286 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 286 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:27 pm

DIN

புதுவையில் மேலும் 286 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 248 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும், மாஹேயில் ஒருவருக்கும் என 286 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,685-ஆக உயா்ந்தது.

சிகிச்சையில் 5,014 போ்: தற்போது 3,240 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். 1,774 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 5,014 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மேலும் இருவா் பலி: இதனிடையே, புதுச்சேரி அருகே பங்கூா் சிவராந்தகம் பிரதான சாலையைச் சோ்ந்த 51 வயது பெண், காரைக்கால் மருத்துவா் இக்பால் தெருவைச் சோ்ந்த 81 வயதானவா் பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 515-ஆக (இறப்பு விகிதம் 1.93 சதவீதம்) உயா்ந்தது.

21,156 போ் குணம்: புதுச்சேரியில் 405 பேரும், காரைக்காலில் 71 பேரும், ஏனாமில் 31 பேரும், மாஹேயில் ஒருவரும் என 508 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 21,156-ஆக (79.28 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.