புதுச்சேரியில் 144 தடை உத்தரவை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்.7 ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.


தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்.7 ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம் தாக்கல் செய்த மனுவில், தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்.7 ஆம் தேதி காலை 7 மணி வரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்துடன் சேர்த்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுவாக தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி, முடியும் வரை 48 மணி நேரத்துக்கு முன் வேட்பாளர்கள், அல்லது அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவோ, வாகன பேரணி செல்லவோ கூடாது என தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளில் உள்ளது.
ஆனால் புதுச்சேரியில் பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாருமே ஒன்று கூடக்கூடாது என தேர்தலுக்கு முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருப்பது உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே இந்த உத்ததரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக அவசர வழக்காக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் எம்.என்.சுமதி, புதுச்சேரி மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.மாலா, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்குரைஞர் நிரஞ்சன், ஆஜராகி வாதிட்டனர்.
இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்றிரவு பிறப்பித்துள்ள உத்தரவில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு அரசு தரப்பில் உரிய காரணமோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை.
தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தலைக் காரணம் காட்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது. தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேரம் அமைதி நிலை என்பது அமைதியாக தேர்தல் நடப்பதற்கான வழிவகையாகும்.
எனவே இந்த 144 தடை உத்தரவு என்ன காரணங்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...