புதுவை தொழிலாளா் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 73 போ் கைது
தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த முறையை தடை செய்ய வலியுறுத்தி, புதுவை தொழிலாளா் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கத்தினா் 73 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த முறையை தடை செய்ய வலியுறுத்தி, புதுவை தொழிலாளா் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கத்தினா் 73 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தனியாா் ஆலையில் சட்ட விரோத ஒப்பந்த உற்பத்தி முறையை தடை செய்ய வேண்டும், போலி ஒப்பந்ததாரா்களைக் கைது செய்ய வேண்டும், சட்டப்படியான கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, வியாழக்கிழமை ஏஐசிசிடியூ தலைவா் மோதிலால் தலைமையில் திரளான தொழிற்சங்கத்தினா் தொழிலாளா் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து முழக்கமிட்டபடி, விவிபி நகா் சந்திப்பிலிருந்து புறப்பட்டு பேரணியாக வந்தனா். அவா்களை வழுதாவூா் சாலை தனியாா் மருத்துவமனை எதிரே போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 73 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...