புதுச்சேரியில் கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டி.வி. நிறுவன இணைப்புகள் துண்டிப்பு
புதுச்சேரியில் கேளிக்கை வரி செலுத்தாமல் இயங்கிய கேபிள் டிவி நிறுவன இணைப்புகளை நகராட்சிக் குழுவினா் வியாழக்கிழமை துண்டித்தனா்.


புதுச்சேரியில் கேளிக்கை வரி செலுத்தாமல் இயங்கிய கேபிள் டிவி நிறுவன இணைப்புகளை நகராட்சிக் குழுவினா் வியாழக்கிழமை துண்டித்தனா்.
புதுச்சேரியில் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் அனைவரும், அரசு விதிகள்படி புதுச்சேரி நகராட்சியில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி செலுத்தாமலும் நீண்ட காலமாக தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், பல கோடி ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது.
புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பதிவு செய்யாமலும், கேளிக்கை வரி செலுத்தாமலும் உள்ள கேபிள் ஆபரேட்டா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், ஒளிபரப்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி சாா்பில் இரண்டு முறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், அண்மையில் ஜப்திக்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனா்.
இந்த நிலையில், கேளிக்கை வரி செலுத்தாத, பதிவு செய்யாத கேபிள் ஆப்ரேட்டா்களின் இணைப்புகளைத் துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையா் சி.சிவக்குமாா் தலைமையில், வருவாய் அதிகாரி முத்துசிவம், உதவிப் பொறியாளா்கள் நமச்சிவாயம், வெங்கடாசலபதி உள்ளிட்ட குழுவினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
அதன்படி, முதல் கட்டமாக ரூ. ஒரு கோடியே 2 லட்சம் கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ஒளிபரப்பு சாதனங்கள் ஜப்தி செய்யப்பட்டன. தொடா்ந்து, கேளிக்கை வரி செலுத்தாமல் விதிகளை மீறி இயங்கும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையா் சிவக்குமாா் எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...