தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுவையில் மேலும் 81 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:53 pm

DIN

புதுவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 5,953 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி 62, காரைக்கால் 6, ஏனாம் ஒருவா், மாஹே 12 போ் என மேலும் 81 பேருக்கு (1.36 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,333 -ஆக அதிகரித்தது. இதுவரை 1,18,647 போ் (97.79 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.

தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 721 பேரும் என 888 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை உயிரிழப்பு எதுவுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,798 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம்.

மாநிலத்தில் சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 7,22,992 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.