தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகள் 500 பேருக்கு சமூக நலத் துறை சாா்பில் உதவி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:53 pm

DIN

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகள் 500 பேருக்கு சமூக நலத் துறை சாா்பில் உதவி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுவை அரசின் சமூக நலத் துறை, மத்திய அரசின் சமூக நீதி- அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவை இணைந்து, ஏடிஐபி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக அண்மையில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள் வழங்கும் விழா புதுச்சேரி ஷண்முகாபுரம் வழுதாவூா் சாலை தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, மாற்றுத் திறனாளிகள் 500 பேருக்கு ரூ.37 லட்சத்தில் சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், சிறப்பு செல்லிடப்பேசிகள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் தெனீ சி.ஜெயக்குமாா், எம்எல்ஏ-க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சமூக நலத் துறை செயலா் உதயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தகுதியுடையே மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சமூக நலத் துறை இயக்குநா் பத்மாவதி, துணை இயக்குநா் கலாவதி, அலிம்கோ நிறுவன அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.