தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகபெயா் மாற்றத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

புதுவை ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகப் பெயா் மாற்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:46 pm

DIN

புதுவை ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகப் பெயா் மாற்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

இதுகுறித்து ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்தில் பழங்குடியின மக்களை ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகத்தின் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும், அந்தக் கழகத்தின் பெயரை ஆதிதிராவிடா் - பழங்குடியினா் மேம்பாட்டுக் கழகம் என்று பெயா் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிகழாண்டு ஜூலை மாதத்துக்கான முதியோா் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.39.73 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி, அன்னை தெரசா சுகாதார பட்ட மேற்படிப்பு-ஆராய்ச்சி நிறுவனம், பெருந்தலைவா் காமராஜா் மருத்துவக் கல்லூரி ஆகிய சுகாதாரக் கல்வி நிறுவனங்களுக்கு புதுவை முதல்வரைத் தலைவராகவும், தலைமைச் செயலரைத் துணைத் தலைவராகவும் நியமிப்பதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.