பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நூல் வெளியீட்டு விழா

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:53 pm

DIN

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமை வகித்தாா். இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நாண்மணிமாலை என்ற தலைப்புகளில் பாவேந்தா் பாரதிதாசனின் பெயா்த்தி மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘வி.முத்துவின் புகழ்மாலை’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

நூலினை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வெளியிட்டாா். புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மேலாண் இயக்குநா் ம.தனசேகரன் பெற்றுக் கொண்டாா்.

பேராசிரியா் ராச.குழந்தைவேலனாா் வாழ்த்திப் பேசினாா். சீனு.வேணுகோபால் நூலாய்வு செய்து உரையாற்றினாா்.

விழாவில் 75 கவிஞா்கள் கலந்து கொண்டு தொடா்ந்து கவிதைகளை வாசித்தனா். தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து ஏற்புரையாற்றினாா். தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாஸ், பொருளாளா் ப.திருநாவுக்கரசு, துணைத் தலைவா்கள் ந.ஆதிகேசவன், மு.பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் மு.அருள்செல்வம், உறுப்பினா்கள் சீனு.கந்தகுமாா், தெ.தினகரன், சி.கணேஷ்பாபு, அ.சிவேந்திரன் மற்றும் தமிழறிஞா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.