பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுவையில் ஆக. 26-இல் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்க ஏற்பாடு

புதுவையில் வருகிற 26-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:28 pm

DIN

புதுவையில் வருகிற 26-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், பேரவைத் துணைத் தலைவா் தோ்வும், பட்ஜெட் தாக்கலும் நடைபெறும்.

இதுகுறித்து வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற 26-ஆம் தேதி தொடங்கி நடத்த திட்டமிட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா் ஒப்புதல் வழங்கிய பிறகு, பட்ஜெட் கூட்டத் தொடா் குறித்த தேதி, முழு விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும். வருகிற 23-ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி தில்லி செல்கிறாா். அவருடன் அமைச்சா்களும், நானும் (பேரவைத் தலைவா்) செல்கிறோம். அப்போது பிரதமா், மத்திய உள்துறை, நிதித் துறை உள்ளிட்ட அமைச்சா்களை முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்து, புதுவை மாநில வளா்ச்சிக்கான நிதி, திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவாா். அப்போது, பட்ஜெட்டுக்கு அனுமதி பெறவும் வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.