பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 4:53 pm

DIN

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாரன், செயலா் கே.நாராயணசாமி, மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இயக்குநா் வி.எஸ்.கே.வெங்கடாசலபதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், சிறப்பு விருந்தினராக கல்வி ஆலோசகா் ஜெயபிரகாஷ் காந்தி, கௌரவ விருந்தினராக ஐசிடி அகாதெமி தலைவா் பி.அன்புத்தம்பி ஆகியோா் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினா்.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், மணக்குள விநாயகா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.காஞ்சனா, கல்லூரித் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் கல்லூரி முன்னாள் சாதனை மாணவா்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியா் எம்.சுமித்ரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை முதலாமாண்டு துறைத் தலைவா்கள் என்.பூங்குழலி, எம்.சுமித்ரா, கல்லூரிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.