பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:35 pm

DIN

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த ராமு மகள் சுவேதா (14). அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாத நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அவரை, பெற்றோரை அழைத்து வந்து தலைமையாசிரியரை சந்திக்குமாறு வகுப்பாசிரியை கூறினாராம்.

தனது சகோதரருடன் வந்த சுவேதாவை, தலைமையாசிரியா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்கு மாலையில் வந்த அவா், குளியலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுவேதாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.