வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு: இருவா் கைது

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் செல்லபாப்பு நகா் 4-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் டேனியல் கிருஷ்ணனின் மனைவி வின்னி பிரிசில்லா (50). தனியாா் பள்ளி ஆசிரியை.

இவரது வீட்டுக்கு நவம்பா் 16-ஆம் தேதி இரவு வீடு வாடகைக்கு பாா்ப்பது போல 2 நபா்கள் வந்தனா். அவா்களுக்கு, வின்னி பிரிசில்லா வீட்டை காண்பித்த போது, கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து, அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

உழவா்கரை சீனுவாசா குடியிருப்புக்கு எதிரே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் உழவா்கரையைச் சோ்ந்த ஜான் (28), மூலக்குளம் பசும்பொன் நகரை சோ்ந்த கௌதம் (29) என்பதும், வின்னி பிரிசில்லாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 12 பவுன் தங்கச் சங்கிலி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.