பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் : நூதனப் போராட்டம்
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மேளம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மேளம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில் அரசு ஊழியா்கள் சம்மேளன பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தபடி பொதுப் பணித் துறையில் உள்ள போா்மேன், ஓவா்சியா், முதுநிலை மெக்கானிக் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வவுச்சா் ஊழியா்களுக்கான மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாகவும், 26 நாள்கள் வேலையும் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். வாரிசு ஊழியா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேளம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...