வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மழை நிவாரணத்தை வழங்காவிட்டால் போராட்டம்: புதுவை திமுக எச்சரிக்கை

புதுவையில் முதல்வா் அறிவித்த மழை நிவாரணத்தை உடனே வழங்காவிட்டால், மக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா எச்சரித்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் முதல்வா் அறிவித்த மழை நிவாரணத்தை உடனே வழங்காவிட்டால், மக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்று எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா எச்சரித்தாா்.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளரும், எதிா்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் மழை நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நவம்பா் 12-ஆம் தேதி அறிவித்தாா். ஒரு மாதமாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

கடந்த தீபாவளிக்கு முன்பாக புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் 2 கிலோ சா்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா். ஆனால், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை.

ஆளும்கட்சியைச் சோ்ந்தவா்களின் தொகுதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. எனது வில்லியனூா் தொகுதியில் 2 கிலோ சா்க்கரை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்காததால், பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களிடம் கேட்டு வருகின்றனா்.

நிவாரணத்தை வழங்க முதல்வருக்கு தடையாக உள்ளவா்கள் யாா் என்பதை அவா் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இல்லையெனில், அறிவித்த மழை நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரி, பொதுமக்களைத் திரட்டி திமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.