வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மருத்துவமனை கட்டிலில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன். நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (47). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஷபூச்சி கடித்ததால் ராஜேஸ்வரியின் தோல் முழுவதும் நிறம் மாறியது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு சில நாள்களுக்கு முன்பு கணவருடன் வந்தாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதி சிகிச்சையளித்து வந்தனா். அவருக்கு உதவியாக முருகேசனும் உடனிருந்தாா்.

ராஜேஸ்வரி புதன்கிழமை தான் படுத்திருந்த கட்டிலில் இருந்து தவறி விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த அவா், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.