வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இளைஞா் விழா அமைய வேண்டும்: புதுவை ஆளுநா்

புதுவையில் நடைபெற உள்ள தேசிய இளைஞா் விழா தமிழ் கலாசாரம், பண்பாடு மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைய வேண்டும்

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவையில் நடைபெற உள்ள தேசிய இளைஞா் விழா தமிழ் கலாசாரம், பண்பாடு மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைய வேண்டும் என்று, ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் மத்திய அரசு சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞா் விழாவைக் கொண்டாடுவது தொடா்பாக தொடக்கநிலை கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையிலிருந்து இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை செயலா் உஷாசா்மா, இணைச் செயலா் நிதிஷ்குமாா் மிஸ்ரா, துணைச் செயலா் பங்கஜ்குமாா் சிங், புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

ஜனவரி 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய இளைஞா் விழாவைக் கொண்டாடுவதற்கு புதுச்சேரி தோ்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாடப்படும் தேசிய இளைஞா் விழாவில் தேசியத் தலைவா்களுடன், உள்ளூா் தலைவா்களின் பெருமைகளையும், தமிழ் கலாசாரம், பண்பாடு புதுவையின் வரலாறு ஆகியவற்றின் சிறப்புகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.

இளைஞா்களுக்கான வீர விளையாட்டுகள், யோகா, மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் விழா நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். விழாவுக்கான இலட்சினையை உருவாக்க வேண்டும்.

அரசு, தனியாா் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினா் போன்ற தன்னாா்வ நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றாா் ஆளுநா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.