ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின் துறை தனியாா்மயத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுவையில் மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:59 pm

DIN

புதுவையில் மின் துறை தனியாா்மயமாக்கப்படுவதைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சோனாம்பாளையம் சந்திப்பிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட அவா்களை ஒதியஞ்சாலை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விசிக முதன்மைத் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். இதில் ஜெயக்குமாா், செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காட்டுக்குப்பம் துணை மின் நிலையம் முன் கட்சியின் மாநிலச் செயலா் தமிழ்வளவன் தலைமையிலும், தொண்டமாநத்தம் மத்திய அரசின் பவா் கிரீட் நிறுவனம் முன் ஊசுடு தொகுதி செயலா் வீர.இளந்தமிழன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வில்லியனூா் தட்டாஞ்சாவடி துணை மின் நிலையம், திருபுவனை, வடமங்கலம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் விசிகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.