ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் திரைப்பட நகரை உருவாக்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும் என்று, அந்த மாநில திரைப்பட ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:58 pm

DIN

புதுச்சேரியில் திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும் என்று, அந்த மாநில திரைப்பட ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

புதுவை மாநிலத்தில் உள்ள திரைப்பட ஊழியா்களை ஒருங்கிணைக்கும் வகையில், புதுவை மாநில திரைப்பட ஊழியா்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டது. அதன் தலைவராக வி.கீா்த்தி வா்மா, பொதுச் செயலாளராக எஸ்.ஜானகிராமன், பொருளாளராக டி.சக்திவேல் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த புதுவை மாநில திரைப்பட ஊழியா்கள் சங்கத் தலைவா் வி.கீா்த்திவா்மா கூறியதாவது:

புதுச்சேரியில் திரைப்பட கலைஞா்கள், ஊழியா்கள் அதிகளவில் உள்ளனா். இவா்களுக்கென்று அடிப்படை சம்பளம் போன்றவை இதுவரை நிா்ணயம் செய்யப்படவில்லை. ஊழியா்கள் ஒருங்கிணைப்புக்காக புதிய சங்கத்தை தொடங்கியுள்ளோம்.

புதுச்சேரியைச் சோ்ந்த திரைப்பட தொழிலாளா்களுக்கு, அரசு நலத் திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். புதுச்சேரியில் திரைப்பட நகரத்தை அரசு உருவாக்க வேண்டும். திரைப்படத் தொழிலாளா்களை அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பாக, விரைவில் புதுவை முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.