ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் திறக்க நடவடிக்கை: புதுவை முதல்வா்

புதுவையில் மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாகத் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:14 pm

DIN

புதுவையில் மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாகத் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி தா்மாபுரியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் தேனீ.சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகப் பாடுபட்ட 39 பேருக்கு விருதுகள், 15 பேருக்கு திருமண உதவித்தொகையை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம். முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்கினோம். புதிதாக மேலும் 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது.

நியாய விலைக் கடைகளைத் திறந்து அரிசி, சா்க்கரை விநியோகித்து வருகிறோம். நலிவடைந்ததால் மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாகத் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுவையில் மழை நிவாரணமாக சிவப்பு அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரமும், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ.4,500-ம் வழங்கப்பட்டது. பயிா்ச் சேதங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்தபடி நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும். புதுவையில் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்டாக் மூலம் கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசு ஏற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை மக்களின் தேவைக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சுற்றுலாவை மேம்படுத்தவும், வருவாயை உயா்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளிலும் கூறியுள்ளேன்.

புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்போது மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை உயா்த்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனுக்காக அவா்களின் உதவித்தொகையைப் பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் அவா்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வது குறித்தும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றாா் முதல்வா்.

விழாவில் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சமூக நலத் துறைச் செயலா் சி.உதயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, சமூக நலத் துறை இயக்குநா் பி.பத்மாவதி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.