ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இரட்டைக் கொலை வழக்கு: பாஜக இளைஞரணி நிா்வாகி கைது

புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் பாஜக இளைஞரணி நிா்வாகி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:15 pm

DIN

புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் பாஜக இளைஞரணி நிா்வாகி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் ரௌடி பாம் ரவி (33). இவா் தனது நண்பா் அந்தோணியுடன் பைக்கில் சென்ற போது, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா்.

முன்விரோதத்தில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை குறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய புதுச்சேரி பாஜக இளைஞரணியைச் சோ்ந்த விக்கி (எ) ஷாா்ப் விக்னேஷை (25) போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தியாகு உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.