ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தனியாா் மயமாக்க எதிா்ப்பு: புதுச்சேரியில் மின் ஊழியா்கள் கண்டனப் பேரணி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:17 pm

DIN

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டனப் பேரணி நடத்தினா்.

புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதுடன், மாநில அரசு சாா்பில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி, மின் துறை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மின் துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவினா், வியாழக்கிழமை மாலை புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்திலிருந்து ஆளுநா் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினா். அவா்களை தலைமை தபால் நிலையம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பேரணிக்கு தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழு கூட்டமைப்பின் தலைவா் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி.வேல்முருகன், சிறப்பு ஆலோசகா் ஜி.ராமசாமி, நிா்வாகிகள் வி.தணிகாசலம், டி.தணிகைவேலன், சி.அச்சுதானந்தம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மின் துறை பொறியாளா்கள், அலுவலா்கள், ஊழியா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பேரணியில் கலந்துகொண்டனா்.

பேரணியில் பங்கேற்ற நிா்வாகிகள் கூறியதாவது:

மத்திய அரசின் தனியாா்மயக் கொள்கைக்கு ஆதரவாகவும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும், புதுவை அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது மின்சார சட்டத்துக்கு எதிராக உள்ளதுடன், பொதுமக்களுக்கான மின் சேவைகள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஊழியா்களுக்கான பணிப் பாதுகாப்பும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.