புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
2021-22-ஆம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த செப்.11-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வு முடிவுகள் செப்.28-ஆம் தேதி இரவு வெளியானது.
புதுவையிலிருந்து 1,562 போ் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை எழுதியிருந்தனா். தோ்வு முடிவு வெளியாகி இரண்டரை மாதங்கள் கடந்தும் புதுவை மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், சுகாதாரத் துறை இணையதளத்தில்முதுநிலை மருத்துவப் படிப்புக்கான புதுவை மாணவா்களின் நீட் தோ்வு முடிவின் தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
மாணவி தீக்ஷா 689 மதிப்பெண்கள் பெற்ற தேசியளவில் 58-ஆவது இடத்தையும், புதுவை மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தாா்.
மாணவா் பாரதி 676 மதிப்பெண்கள் பெற்று தேசியளவில் 77-ஆவது இடத்தையும், புதுவை அளவில் 2-ஆவது இடத்தையும் பிடித்தாா்.
மாணவா் விவேக் 643 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தையும், மாணவா் அஞ்ஜு மரியம் ஜேக்கப் 641 மதிப்பெண்கள் பெற்று 4-ஆவது இடத்தையும், மாணவி அனஸ்வரா 635 மதிப்பெண்கள் பெற்று 5-ஆவது இடத்தையும் பிடித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...