ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியைச் சோ்ந்த 14 வயது சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து விட்டு, அழகுநிலையம் வைத்திருந்த தனது அத்தைக்கு உதவியாக இருந்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதி மாலை படிக்கக் கூறி கண்டித்த அத்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சிறுமி வெளியேறினாா்.

அன்றிரவு புதுச்சேரி அண்ணா சாலைப் பகுதிக்கு அருகே தனியாக நடந்து வந்த அவரை, விழுப்புரம் காகுப்பத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகா் (38), தனது ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் அந்த சிறுமி தனது அத்தையை தொலைபேசியில் அழைத்து விவரத்தை தெரிவித்ததையறிந்த ராஜசேகா், சிறுமியை மீண்டும் புதுச்சேரியில் விட்டுவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜசேகரை கைது செய்தனா்.

புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி செல்வநாதன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், ராஜசேகருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், போக்ஸோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 12,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவில் குறிப்பிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுவை அரசு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக என்.பாலமுருகன் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.