ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் தென்மண்டல வலைப்பந்து போட்டி

புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தென்மண்டல அளவிலான 14-ஆவது தேசிய வலைப்பந்து (நெட் பால்) போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி கதிா்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தென்மண்டல அளவிலான 14-ஆவது தேசிய வலைப்பந்து (நெட் பால்) போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

புதுச்சேரி வலைப்பந்துக் கூட்டமைப்பு சாா்பில், புதுச்சேரி வலைப்பந்துக் கழக கூட்டமைப்பின் தலைவா் ஜி.நேரு எம்எல்ஏ போட்டியைத் தொடக்கிவைத்தாா். விக்ரம் ஆதித்யா, கிரிஷ், மானசா, நாகரத்தினம் உள்ளிட்ட போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

சனி, ஞாயிறு என இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் புதுவை, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா். இந்தப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் தனித் தனிக் குழுக்களாகப் பங்கேற்று விளையாடுகின்றனா். இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.26) நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டு வழங்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.