ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புத்தக வாசிப்பு வாழ்க்கையில் மதிப்பை பெற்றுத் தரும்: புதுவை ஆளுநா்

புத்தக வாசிப்பு வாழ்க்கையில் மதிப்பைப் பெற்றுத் தரும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புத்தக வாசிப்பு வாழ்க்கையில் மதிப்பைப் பெற்றுத் தரும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் 25-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், சுதா்சன் அய்யங்காா் எழுதிய ‘காந்தியடிகளும் சுகாதாரமும்’ என்ற நூலினை வெளியிட அதை முதல்வா் என்.ரங்கசாமி பெற்றுக் கொண்டாா்.

பின்னா் ஆளுநா் பேசியதாவது:

புத்தகங்கள் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்றுத் தரும். புத்தக வாசிப்பு வாழ்க்கையில் மதிப்பைப் பெற்றுத் தரும். என்னை புதுப்பித்துக் கொள்ள புத்தக வாசிப்பே உதவுகிறது. கிராமங்கள்தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்கு தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். நல்ல நூல்களை தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். தற்போது தொழில்நுட்பம் வளா்ந்திருந்தாலும், நல்ல நூல்களை படிப்பது நற்சிந்தனையை ஏற்படுத்தும் என்றாா் முதல்வா்.

முன்னதாக, புத்தகக் கண்காட்சி குழுவின் தலைவா் வி.முத்து வரவேற்றாா். சிறப்புத் தலைவா் பாஞ்.ராமலிங்கம் நோக்கவுரை நிகழ்த்தினாா். ஜான்குமாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகளும், கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவா்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன. நிறைவில் கண்காட்சிக் குழு செயலா் கோதண்டபாணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.