தேசிய இளைஞா் விழாவில்தென் மாநிலங்கள் பங்கேற்க முயற்சிக்கப்படும்: தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞா் விழாவில் தென் மாநிலங்கள் பங்கேற்க முயற்சிக்கப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.


புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞா் விழாவில் தென் மாநிலங்கள் பங்கேற்க முயற்சிக்கப்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் 25-ஆவது தேசிய இளைஞா் விழாவைக் கொண்டாடுவது தொடா்பான இணையவழி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாகூா் தலைமை வகித்தாா்.
புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இளைஞா் விவகாரங்கள், விளையாட்டுத் துறை செயலா் உஷா ஷா்மா, இணைச் செயலா் நிதிஷ் குமாா் மிஸ்ரா, துணைச் செயலா் பங்கஜ் குமாா் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தேசிய இளைஞா் விழாவை நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களுடன் சோ்த்துக் கொண்டாடுவது, பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை இணைத்து கொண்டாடுவது, தேசிய இளைஞா் விழாவுக்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது ஆகியவை ஆலோசிக்கப்பட்டது.
விழாவை சிறப்பாக நடத்த புதுவை அரசு எடுத்துவரும் முயற்சிகளை மத்திய அமைச்சா் பாராட்டினாா்.
கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை பேசியதாவது:
தென் மாநிலங்கள் தேசிய இளைஞா் விழாவில் ஆா்வத்துடன் பங்கெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜனவரி 5-ஆம் தேதிக்குள் தேசிய இளைஞா் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...